தலைப்புத்தேடும் கவிதைகள் - ஷக்தி

Photo by Sajad Nori on Unsplash

சேலை!
அதிகாலையில் எப்போதும்!
மூடுபனிச்சேலை கட்டி,!
மோகமுள் கொண்டு நிற்பாள்!
என் வீட்டு வெள்ளை ரோஜா.!
அனுதினமும் வந்து!
வேகமாய் துயிலுரித்து!
தாகமாய் முறைப்பான்,!
சூரிய துரியோதனன். !!!
---!
என்றும்,!
தணியாததோர் தேகதாகம்.!
எதற்கும்,!
பணியாததோர் தாகதேகம்.!
முற்றும் துறந்தவனையும்!
விட்டுவைப்பதில்லை.!
மண்டியிடவே வைக்கிறது!
இந்தியத்தொலைக்காட்சிகளின் முன்.!!!
---!
எந்த நொடியிலும்!
சறுக்கி விழுந்தோடி!
சாகவும் துணிந்துதான்,!
இந்த நொடியிலும்!
ஜூலியட் ரோஜாவின்!
சுழல்போதை இதழ்மேல்!
குலைந்து நிற்கிறதோ!
அந்த அதிகாலை தேசத்து!
ரோமியோ பனித்துளி. !!!?!
---!
காதலில்!
உனது வாழ்வு, பயணம்!
எனது வாழ்வு, பணயம்.!
வாழ்வில்!
உனது காதல், முதலீடு!
எனது காதல், முறையீடு.!
என்னில் உனது காதல், காமம்!
உன்னில் எனது காதல், காயம்.!
மண்ணில் நமது காதல், பாடம்
ஷக்தி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.