நமது பயணங்கள்!
உடைவுகளோடு.....!
இப்படியே முடிந்துவிடுகிறது..!!
துண்டு..துண்டாய்!
எத்தனை சினேகிதிகள்!!!
பல்கலைகழக!
கன்ரீன் முற்றத்து!
வாசகங்கள்!
இன்னும் நினைவிலுண்டு....!
நாம் நாமாக!
நமக்காக இருந்தோம்....!
அடர்ந்த பற்றைகளோடு!
அழுக்கேறிய கற்களோடும்!
அந்த மரத்தடியை!
நாம் ஐவருமே!
அழகாக்கினோம்!
பரீட்சை!
முடிந்தகையோடு!
அவசரமாய் விடைபெற்றோம்!
ஆற்றமுடியாத அழுகையோடு...!
புகைப்படங்களும்!
ஆடோக்ராப்களுமாய்!
கடைசிநாளின் கலவரம்!
இன்னும் நினைவிலுண்டு..!
நீண்ட!
இடைவெளிகளின் பின்னரான!
தொலைபேசியின்!
அறுவைகள்!
எஸ்.எம்.எஸ். ஆய்!
உருமாறிக்கடைசியில்!
காணாமல்போயிற்று...!
வருகிற!
திருமண அழைபிதழளுக்கு!
'ஸாரி'!
சொல்லி வாழ்க்கை ...!
அலைகிறது!
குழந்தையின்!
அழுகையை நம்!
புகைப்படங்கள்!
நிறுத்திக்கொண்டிருக்கிறதாம்!
நிஜமா????!
நம் சந்திப்புகள்!
எதிர்பாராமல்!
எப்போதாவது நடந்துவிடுகிறது....!
ஒரு அதிசயம்போல!
குழந்தைகளோடு...!
பொறுப்புள்ள உம்மாவாய்!
ருமைசாவும்..!!
படிப்போடு!
பிடிவாதமாய் இருக்கும்!
அக்மலும்.....!
கணவரின்!
மார்க்கக்கடமையில்!
கருத்தாய்...!
சிஹானா!!!!
அவசர அவசரமாய்!
திருமணமாகி.....!
காணமல்போன!
ஸீனத்...!
நாங்கள்!
கடைசிநாளிலேயே!
தொலைந்துவிட்டோம்...!!!!
இப்போதெல்லாம்!
நாங்கள்!
புகைப்படங்களில்!
மட்டுமே!
ஒன்றாயிருக்கிறோம்
றஹீமா-கல்முனை