மாற்றம் - ரிஷபன்

Photo by Steve Johnson on Unsplash

'நாளை உனது கடைசி நாள்...'
என்று, யாரோ ஒருவர்
என் தலை வருடி
சொல்லிப் போனார்.

கனவு பொய்யோ நிஜமோ
இன்றொரு நாள்
'இப்படித்தான் இருக்கலாமே '
என்று யோசித்தேன்.

எதுவும் நிகழாமல்
மீண்டும் விழித்தபோது
உள்ளே குரல் கேட்டது...
'இப்படியே இருந்து விடலாமே'
ரிஷபன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.