01.!
புதுமெய்!
-----------!
புதுமை, புதுமெய்!
சாதி மரங்கள்!
வானளாவி வளர்ந்துள்ள!
சமுதாயக்காட்டில்!
தனிமரங்களும்!
தோப்பாகக் காட்சியளிக்கின்றன!
அரியாசனமாகும்!
அரசியல் ஆசையுடன்...!
ஆசையே துன்பமென!
மொழிந்த போதிமரங்கள்!
கருகி கண்ணீருடன்…!
உயிர்வளி உறிஞ்சி!
கரியமிலவாயு மட்டுமே கக்கும்!
பசிய மர நிழலடிகயில்!
தனிமனிதம்!
புதியதொரு சமுதாயக்காடு!
உருவாக்க சாதிய மரங்கள்!
தங்கள் வித்துக்களுடன்!
தடைக்கின்றன!
வரிசையாக போட்டியிட்டுக் கொண்டு!
சாதியக்காட்டின் ஏற்றத்தாழ்வுகள்!
அழிக்கப்பட்டால்!
நிச்சயம் மிஞ்சும் காந்தியின்!
ஊன்றுகோலும்!
போதிமரங்களும்.!
!
02.!
தியாக பூமி!
----------------!
வான வீதியில்!
ஒளி வீசிப் பறக்கும்!
சமாதானப் புறாவை!
வட்டமிட்டபடியே!
தீவிர வல்லூறுகள்.!
தன்னைக் குறிவைக்கும்!
பீரங்கிகளையும்!
செயலிலக்கச் செய்யும்!
கருணைப் பார்வைஇ!
சமூக ஊர்கோலத்தால்!
கண்கள் சிவந்துஇ!
நோட்டமிடும்!
கனத்த இதயத்துள்!
கம்பி வேலிக் காயம்!
உயிர் போகும் வேதனை!
புறாவைக் காக்க!
தன்தசை கொடுக்கும்!
சிபிச் சக்கரவர்த்திகளால்!
சாதனைப் பட்டங்கள்!
நீள்கின்றது…!
புறாத்தோல் போர்த்திய!
வல்லூறுகளால்!
பச்சைத் தசைகள்!
ருசிக்கப்படும் தருணங்களிலும்…!
இ(ந்) த் தியா க பூமியில்

பா.நேருஜி