அலையில் பார்த்த முகம் கவிதைதொகுப்பிலிருந்து சில கவிதைகள்!
1.நீர் சுரக்கும் அலை!
ஒரு அலை!
அழித்துவிட்டுப்போகலாம்!
நம்புங்கள்!
ஒரு மழை!
முளைக்க வைத்துப் போகும்!
2.இங்கு இப்படியாக இலக்கியம்!
ஜெயகாந்தன் புதுமைப்பித்தன்!
கு.அழகிரிசாமி தி.ஜானகிராமன்!
சுஜாதா பாலகுமாரன்!
இன்னும் எவர் எவரோ!
நூலக அடுக்குகளில் வரிசையாக!
எத்தனையோ நாளாய்!
என்னோடு பேச!
மன்னிக்கவும்!
ஒன்பது மணிக்கு நூலக அடைப்பு!
ஒரு மணி நேர இண்டர்னெட்டில்!
பிரான்ஸ் தேசத்து பெண்ணோடு!
பில் பிளிண்டன் பற்றிப் பேச!
இன்னும் இருப்பதோ இருபது நிமிடம்!
எங்கே போய்விடும் இலக்கியம்!
பேசலாம் பின்னொரு நாள்!
3.ஈதலே வித்தாக!
சாமி!
வேலை அவசரத்தில்!
சிகப்பு சிக்னல் பரிதவிப்பில்!
பச்சை விளக்குக்கு!
பதற்றமாய் பார்த்திருக்க!
வயிற்றுப் பிழைப்புக்கு!
முகம் முன்னே கரம் நீட்டும்!
குருட்டு மனிதனின் இருட்டுக்குள்!
கரையாமல் மறையாமல்!
ஏதேனும் ஈகின்ற!
இளகிய மனம் எனக்குத் தா

பாலு மணிமாறன்