தலை தேங்காய்கள் உடைத்தாயிற்று!
தீர்த்தம் இரத்தம் - தெளித்தாயிற்று !!
சிகரெட் நுணியிலும்!
அகல் திரியிலும்!
மந்தமாய் ஒளிரும் - இந்த!
பூனைக்குட்டி நெருப்பின் பசிக்கு!
நூறு குடிசைகள் பொசுக்கி!
யானை சோறு போட்டாயிற்று.!
இன்னும் எத்தனை நாட்களாம்!
இந்த சாதிக்கடவுளின் பூசைக்காலம்?!
நவின்