அன்பே உனக்காக!
நான்!
நிறையவே இழந்திருக்கிறேன்...!
குறிப்பாக!
என் வாழ்க்கையை...!
நான்!
எனக்காக வாழவில்லை..!
எனக்குள் வாழும்!
உனக்காக.....!
நான் சேமித்தவற்றில்!
மிக முக்கியமானவை..!
நீ வெட்டி எறிந்த!
நாகதுண்டும் கூந்தல் முடியும்.....!
நான் உனக்காக!
பல கவிதைகள் எழுதி இருக்கிறேன்.!
ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வேடத்தில் நீ....!
ஆனால் நீ எழுதும்!
ஒரே ஒரு கவிதையிலும்!
தியாகியாக நான்

இரா. தாமரைச் செல்வன், சேலம்