என் உலகம்..!
01.!
என் உலகம்!
----------------!
கடும் மழை பெய்து கலைத்திட்ட மேகம்!
மெதுவாய் மழை தூறல் தூவ!
வாசல் கதவுவரை வந்த நீரை வாரி இறைத்துக்கொண்டிருந்தார்!
அம்மம்மா..!!
நேரம் ஆயிற்று எழுந்திரு பள்ளி செல்ல என்றார் அம்மா..!!
கைபேசியை காலையிலே நோண்டாதே என்று கத்தித்தீர்த்தாள்!
அத்தை..!!
புத்தகசுமையை சுமந்துகொண்டு வெளியே வந்தபோது அடக்கிவைத்த கோபத்தை அடிச்சுத்!
தீர்த்தது மழை..!!
அப்பாடா..!!
இன்று பள்ளி விடுமுறை என்று பரவசப்பட்டது என் மனம்...!
தொடங்கிற்று எங்கள் வீட்டு தொலைக்காட்சி பெட்டியில்!
டோராவின் பயணங்கள்... !
02.!
செல்ல குட்டிக்கு...!!
-------------------------------- !
மின்மினிப் பூச்சிகளின் கண்சிமிட்டும் மாலை நேரம்...!!
சத்தமில்லாமல் தூங்கிக்கொண்டிருக்கும் அன்று பிறந்த பூனைக்குட்டிகள்..!!
பிரிய மனமில்லாமல் பிரிந்து செல்லும் அந்தி சூரியன்..!!
அறிந்தும் அறியாமலும் செய்த தவறுக்காக வருந்திக் கொண்டிருக்கும் ஆலய பக்கதர்கள்..!!
நாளை விடியலுக்காக காத்திருக்கும் நாட்டு ரோஜா மொட்டுக்கள்..!!
இத்தனைக்கும் இடையில் படிக்கவில்லை என்று!
அம்மா அடித்ததில் அழுதுகொண்டிருக்கும்!
எனது சத்தம் மட்டும் உரக்க ஒலிக்கிறது...!!
எனது உலகத்தில்..! !
-நவா நடா
நவா நடா