தேனிசை தென்றலின்
மழைச்சாரலில்
கூவும் குயில்களின்
இனிய இராகத்தில்
குதித்தோடும் அருவிகளின்
ஓசைதனில்
கொஞ்சும் கிளிகளின்
பேச்சினில்
ஓயாமல் பொங்கும்
அலைகளில்
ஆழியில் நீந்திமகிழும்
வண்ணமீன்களில்
அசைந்தாடும் மயில்களின்
அழகினில்
ஓசையிடும் சோலைகளின்
கீதந்தனில்
காணும் இன்பத்தை விட
அதிக இன்பம்
கொடுத்து மகிழ்ச்சியளிப்பது
தாயின் மடியே
நந்தினி நீலன்