வீணாய்ப்போன பொழுதொன்றில்!
காணாமல் போயிற்றென்!
காதல்…!!
மனம்தான் பெரிதென்று!
காதலில் பிதற்றியவள்!
மயக்கம் தெளிந்தவுடன்!
பணத்தின் மகிமை சொன்னாள்.!
உள்ளம் ஒத்தென்ன!
உணர்வுகள் ஒத்தென்ன!
கலைத்துவக் கண்களால்!
காதலைப் பார்த்தென்ன!
புழுதி அடங்கியதும்!
தெரிகின்ற கழுதைபோல்!
காதல் கழிந்தபின்தான்!
சகலமும் புரிகிறது.!
தூளாகிப் போகுமென்று தெரிந்தும்!
பாழாய்ப்போன மனம்!
மணல்கோட்டை கட்டத்தானே!
மல்லுக்கு நிற்கிறது.!
உன்மீது குற்றமில்லை,!
சராசரிக் காதலியாய்!
மன்னியுங்கள்,!
மறங்களென்றாய்.!
உன்மீது குற்றமில்லை.!
வீணாய்ப்போன பொழுதொன்றில்!
காணாமல் போயிற்றென்!
காதல்…

மன்னார் எம். ஷிபான்