பேரினவாததிற்கென முகங்களுண்டு!
தாக்கப்படுவோரின்!
குரல்வளைக் குருதியில்!
மிளிருமது.!
பேரினவாதத்திற்கென!
பேச்சுமுண்டு!
அறுக்கப்படுவோரின்!
அலறில் எதிரொலிக்குமது.!
பேரினவாததிற்கென!
கைகளுமுண்டு!
கொடு£ரங்கள் நிகழ்த்துகையில்!
வாளேந்தி வருமது!
இப்படி!
பேரினவாதத்தின் முகங்கள்!
நீழுகின்றன!
அடக்கு முறையின்!
உருவங்களாக!
--கவிமதி
கவிமதி