குருவிகள் போயின போயின
அடர்ந்த கரும்புதருக்குள்ளிருந்து குருவிகள் பறந்துபோயின
அதிகாலை மின்னும் சிறகுகளுடனும் குறுந்தலைகளுடனும்
எனது தலையை அவற்றின் பறத்தலுக்காகத் திறந்து கொடுத்தேன்
ஒன்றாகி இரண்டாகி நூறாகி ஆயிரமாகிக் கலைந்தன
ஒடுங்கி வியர்த்திருந்த உடலும் சிறகுகளும் சுவாசிப்பதற்காக
விண்ணெங்கும் அலைந்து கொண்டேயிருந்தன ஒரே குருவியாகி
புதருக்கு அடியில் கும்மிருட்டு மூடிக்கொண்டிருந்தது இரத்தச்சகதியான
என் ஈரநிலத்தையும் பறக்கமுடியாத குஞ்சுகளையும்
ஊழியின் பெருவலி என்னகத்தே உள்ளது என்பதால்
இன்னும் உறங்காமல் இருக்கின்றன குஞ்சுகளும் கனவுகளும் புதருக்குளே
குட்டி ரேவதி