பின்னின்று அணைத்து..
காதோரம் கடித்து..
கன்னம் என்னும் வயலில் மூச்சு காற்றை பயிரிட..
விளைந்தது என்னவோ முத்தங்கள் ..
நேர்த்தியாய் தேர்ந்தெடுத்து
கூடை என்னும் சிறை கொண்டு அழைத்துவரப்பட்ட காய்கறிகள் அனைத்தும்
வெட்கம் கொண்டு ,
கண்மூடி ,
விரல்கள் இடுக்கில்
காட்சியை தொடர..
இரு ஜோடி கண்கள் என்னும் அரியணையில் காதல்
தேவன் வீற்றிருக்க ..
தலைப்பாகை என்னும் பாத்திரங்கள் அணிந்த அலமாரிகளில் அணிவகுப்பில் ,
தவறாமல் கலந்து கொண்ட மசாலா டப்பாக்களின் முன்னால்
குப்பை என்னும் பூக்கள் தூவப்பட்ட படுக்கை இல்லா தரையில்..
உருண்டும் ,
பின்பு
புரண்டும் ,
விருப்பத்தினால் ஆக்கப்படும் அறுசுவை உண(ர்)வுகள்.
இவ்வாறே
அரங்கேற்ற விழாவை நடத்தி கொண்டே இருக்கும்
புதுமண தம்பதிகளின்
யாருமற்ற சமையலறை ...
கதிரவன்