நீ
என் மார்ச்சாய்ந்து விழி மூடி மூச்சிழுத்து கிடக்கையிலே ..
மதுவின் கதவில் மகிழ்ச்சியை பூட்டி
பின்பு
அதுவாகி ,
இதுவாகி,
எதுவாகி என மனதோடு முட்டி ..
கிணற்றில் ஊறிய வாளியை போலவே
வான் நோக்கி நிற்கிறேன்
உன் அதாதி காதலின் ஆழத்தில்...
நெஞ்சோடு அணைத்த இன்பத்தினை முற்றிலுமாய்
கூற முடியா
இக்கவிதையோ நீட்சியாய் ..

கதிரவன்