01.!
மழைக்கால ஞாபகங்கள் !
-------------------------------!
அந்தி வானம்!
அழகாய் சிவக்கும்!
மேகங்கள் மெல்ல!
ஒன்று கூடும்!
குட்டிகளை!
கொண்டு வைக்க!
இடம் தேடும்!
நாய்கள்!
கோழிகளின்!
இறக்கைகளில்!
இடம் தேடும்!
குஞ்சுகள்!
ஓலைக்குடிசையினூடே!
ஒழுகிவரும் நீரை!
தட்டிவிட்டு!
மகிழ்ந்த!
நிமிடங்கள்!
தெருவோடும்!
செந்நீரில்!
கப்பல் விட!
ஆசைப்பட்டு!
அண்ணனுடைய!
புத்தகத்தை!
கிழித்ததினால்!
அப்பாவிடம்!
அடிவாங்கிய!
தருணங்கள்!
மழைக்குட்டைகளில்!
வால் முளைத்த!
தவளை குஞ்சுகளை!
மீன்களென்று!
பிடித்துப்பார்த்த!
நாட்கள்!
மழைவிட்ட!
சகதியிலே!
அழுக்கான!
சட்டையோடு!
அரைகுறை தூக்கத்திலே!
அதை கழட்டும்!
அம்மாவின் திட்டுகள்!
மெல்ல காதுகளில்!
ஒலித்த நேரங்கள்!
முகில்கள்!
முகம் காட்டும்!
சில நேரங்களில்!
தலைக்காட்டும்!
மழைக்கால ஞாபகங்கள்!!
02.!
புன்னகை !
--------------!
புன்னகை!
பூக்கள்தான் இந்த!
பூவுலகை!
நிறைக்கிறது !
ரோஜாக்களின்!
புன்னகைதான் அதன்!
முட்க்களை!
மறைக்கிறது !
மல்லிகையின்!
புன்னகைதான் அதன்!
மணமாக!
இழுக்கிறது !
பூக்களின்!
புன்னகைதான் தேன்!
வண்டுகளை!
அழைக்கிறது. !
வானத்தின்!
புன்னகைதான் அதன்!
வானவில்லை!
கொடுக்கிறது !
மனிதனின்!
புன்னகையே அவன்!
மகத்துவத்தை!
உயர்த்துகிறது
கருவி பாலகிருஷ்ணன்