குழந்தை -!
ஓர் விஞ்ஞான வியப்பா?!
ஓர் அற்புதப் படைப்பா?!
குழந்தை -!
கடவுளின் அருளா?!
அவனின் பொருளா?!
குழந்தை -!
இனம் பெருக்கும் பிறவியா?!
அறிவு சேர்க்கும் அமுதசுரபியா?!
குழந்தை -!
வாழ்க்கை ஆனந்தத்தின் பன்னீரா?!
அதன் அவலங்களின் கண்ணீரா?!
குழந்தை -!
செலவான உறவுகளின் அழகா?!
செல்லாத உறவுகளின் அழுக்கா?!
குழந்தை -!
அவசரக் காதலின் முத்தமா?!
தேதி குறிக்காத முகூர்த்தமா?!
முடிந்துபோகும் அந்த முத்தமா?!
குழந்தை -!
தனித்திருக்கும் தாய்மார்களுக்கு!
சவால்களை சமைத்த போராட்டமா?!
சங்கடங்களை கிழிக்கும் பேரின்பமா?!
குழந்தை -!
மனித வளர்ச்சிக்குப் பாலமா?!
சமுதாய பிரச்சனைகளின் பள்ளமா?!
குழந்தை -!
உலகின் எதிர்கலாமா?!
வளர்ந்து வரும் அடிமை எந்திரங்களா?!
குழந்தை -!
அடுத்த அப்துல்கலாமா?!
போர்க்களத்தின் மனித அணுகுண்டுகளா?!
!
குழந்தை -!
அனாதையென தெரிந்தால்!
பிறப்பது பாசமா?!
பார்த்தால் பாவமா?!
குழந்தையெலாம் ஓர் வினா!!
ஓர் வாழ்க்கை வினா.!
விடை தருவது நாம்!
அதை நன்று சிந்தித்து சீர்தூக்கி!
சிறப்பாய் எழுதுவோம் நாம்
கொ.நூருல் அமீன்