தோளில் நீ சாய்கையில்
சில்லென்று ஒரு தென்றலும்
என்னை சுற்றி சுழன்றது,
என் கை பிடித்து நடக்கையில்
பரந்த வானமும் எந்தன்
காலடியில் சிறைப்பட்டது,
ஒவ்வொரு புன்னகை பூவிலும்
ஆயிரம் மலர்கள்
என்னுள் பூத்தது,
ஆயிரம் வேள்விகள் புரிந்தாலும்
கிடைக்கா வரமா நீ?
உன் நினைவுகள்
என்னுள் கலந்திட,
உன் வெறுமை அனலாய் எரித்திட
காதலுடன் என்றும்
நான்
கனவுசிற்பி