அரசுப் பேருந்தில் அறிவிப்பே இல்லாம்!
பேருந்து கட்டணம் உயரது!
மாடுகள் மாதிரி!
பேசமா டிக்கெட் வாங்கிட்டு போகுது!
திருமங்கலம் தொடங்கி!
பென்னாகரம் வரை!
நோட்டுக்கு ஓட்டுகள் விலை போகுது!
85 சதவிகிதததிற்கு மேல்!
வாக்குகள் பதிவாகுது!
ஒத்த ரூபாய்க்கு அரிசி விலை!
பத்து ரூபாய்க்கு உப்பு விலை!
சமைக்கிறதுக்கு வேணும் நூறு வில்லை!
வயிறு இன்னும் நிறைய வில்லை!
காயுது கரும்புக் காடு!
தாகத்தால் நோகுது ஆடு மாடு!
நீச்சல் குளத்தோடு சென்னையில் வீடு!
நீ டாஸ்மார்க் தண்ணீயில் ஆடு!
பொது நலமே தன் நலன் என்பவனுக்கு!
பெட்டி பெட்டியா போகுது பணம்!
முற்றும் துறந்த ஞானியின் ஆசிரமத்தில்!
தோண்டத் தோண்ட வருது பிணம்!
ஆதி முதல் அந்தம் வரை!
அரசாங்க அலுவலகங்களில் லஞ்சம்தான்!
அது கொடுக்காம தாராம!
அங்க நடக்காது காரியம்தான்!
கல்விக் கூடத்திலும் காவல் நிலையத்திலும்!
காம வன்கொடுமை களியாட்டம் - அதை!
கண்டுக்காம இருக்கிறோமே இல்லாத பேயாட்டம்!
இன்னும் இருக்குதா மனுசப்பயக நடமாட்டம்
கண்ணன். சி