என் கண்களிலிருந்து விடை பெற்று ....
என் கனவுகளுக்குள் குடியேறினாய்....
கையசைத்து செல்கிறாய்...
கடைக்கோடியில் ஓர் புள்ளியாய் மறைந்து போகிறாய்...
உன் காலடி சுவடுகள் மறைந்து போக....
தொலைவில் உன்னை காணாமல் பரிதவிக்கிறேன்..
தொடரும் பொறுப்புகள் எனை அழைக்க....
மீண்டும் நுழைகிறேன் வீட்டுக்குள்...
ஒவ்வொரு இடமும் உன்னை நினைவு படுத்த...
என் கண்களிலிருந்து உன்னை விடுவிக்கிறேன்...
எனினும்...
மனம் மட்டும் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது ......
உனைத்தொடர்ந்து...
என்றோ ஒரு நாள் நீ வருவாயென...
காயத்ரி தேவி