மழை பெய்து
ஈரமான மணல்...
போன வருடம்
கார்த்திகை தீபத்திற்கு
வாங்கிய அகல்களை
தேடிப் பிடித்தான்...
'வாங்க, வாங்க.....'
சூடான இட்டிலி...'
வரிசையாய் சுட்டுவைத்த
அந்த மணல் இட்டிலிகளை
'அபுக் அபுக்கென்று'
உண்பதுபோல்
பாவனைசெயதனர்
அவனின் நண்பர்கள்!
தணல் கொண்டு வேகாத
மணல் இட்டிலிகளால்
நண்பர்களின் வயிறு
நிறைந்ததோ இல்லையோ
அவன் அகம் நிறைந்தது....
மறைந்த அம்மாவின்
அறுசுவை நினைவுகளால்