மிரள வேண்டாம்! இவர்கள் வெறும் மனிதர்கள்! - இன்பசுதேந்திரன்

Photo by geissht on Unsplash

சூரனுக்கு!
ஒரு!
வேலாயுதம்!
இரண்யனுக்கு!
ஒரு!
சிங்க முகம்!
சிரித்து எரிப்பதற்கு!
ஒரு!
திரிபுரம்!
சாத்தானை!
விரட்ட!
புனித நீர்!
அவதாரங்களே உங்கள்!
ஆயுதங்களால்!
எதிரிகளைத்தானே கொன்றீர்கள்!
இவர்களின் ஆயுதங்களோ!
எதிரிகளின்!
இனத்தையே கொன்று குவிக்கிறது!
இதையெல்லாம் கேட்டு!
மிரள வேண்டாம்!
இவர்கள் வெறும்!
அணுக்குண்டு மனிதர்கள்!
இன்பசுதேந்திரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in
  • elangovan Avatar elangovan - 1 வாரம் முன்

    pls aasiriyar kurippu pathivitavum