மௌனக்கொடி..!
-----------------------------------------------------------------!
உதடுகளைப் பூசிப் போகின்றன..!
கனவில் பொழிந்த பனித்துளிகள்..!
கை நிறைய மலர்க்கொத்துத் தருகிறாய்..!
இரவின் வாசலில்...இசையின் பின்னணியில்!
பார்வையின் பரவசத்தில்..!
இதயத்தில் தூறுகிறது மழைச்சாரல்..!
இலைக் குடை அகப்படா வனத்தில்..!
தனித்து அலைகிறோம்..!
நதிக்கரையோரம்!
தென்றல் கசியும் மஞ்சள் வெயில் பொழுதை..!
பென்சில் கொண்டு கிறுக்கிப் பார்க்கிறேன்..!
அதில்..!
கருப்பு வெள்ளையாய் விரிகிறது!
உன் புன்னகை..!
பிரிதலின் பசலையை!
நெய்துக் கொண்டே இருக்கிறது..!
மௌனக்கொடிச் சுற்றி மனது
இளங்கோ -கவிதைக்காரன் டைரி