கசந்து போகும் !
எம் நினைவுகளுக்குள் !
சதுரங்க விளையாட்டில் !
நகர்த்தப்படும் !
காய்களைப்போல !
நகரமறுத்தாலும் !
நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறோம் !
மெய்களைப் புதைத்துவிட்டு !
பொய்களுக்காக !
புரட்சிக்கொடி ஏந்துகிறோம் ..!
அறிமுகங்களை !
அறுத்தெறிந்துவிட்டு !
ஆளுமையால் !
அடிமைகளாய் இருக்கிறோம் !
நீதி தேவதையின் !
கண்களை கட்டிவிட்டு !
தலைமேல் !
நடனமாடுகிறது தவறு ..!
போதி மரங்களுக்குள் !
ஒளிந்துகொண்டு !
புனிதர்கள் கூட !
புறப்பட்டு விட்டார்கள் !
புனித நீர் என்று !
களர் நீர் பருகிட ..!
பல பாகங்களில் !
ஆயுத அணிவகுப்பால் !
ஆதாரமின்றிப்போகிறது !
மனித உயிர்கள் ...!
வாசனைப் பூக்களை !
தொலைத்துவிட்டு !
காகிதப்பூக்களோடு !
காதல் மொழி பேசுகிறோம் ..!
கையிலிருக்கும் வைரங்களை !
நிலக்கரியாகவும் !
எங்கோ இருக்கும் !
நிலக்கரியினை !
வைரமாகவும் !
மதிக்கப் பழகி விட்டோம் !
மூங்கில் காடுகளை !
கொளுத்திவிட்டு !
பீரங்கித் துளைகளில் !
புல்லாங்குழல் ஓசையைத் தேடுகிறோம் !
நினைவுகளை தொலைத்துவிட்டு !
கனவுகளில் !
கூச்சல் போடுகிறோம் !
மொத்தமாய் ....!
அண்டசராசரங்கள் !
ஆயிரம் அர்த்தங்கள் சொன்னாலும் !
எங்கள் !
நெஞ்சங் கூட்டுக்கு !
கவசமிட்டு விட்டோம் !
நாங்கள்

ஹபீலா ஜலீல்