காவல்காரன் - எம்ஸீயே.பரீத்

Photo by FLY:D on Unsplash

முற்றத்தில் முள்ளில்லாத !
ரோஜா !
கைக்கெட்டிய தூரத்தில் !
செவ்விழ நீர் குலைகள் !
தடவியே பார்க்கலாம் !
காவல்காரனாகிவிட்ட !
தோட்டக்காரன் !
படலைகள் !
திறந்தேகிடக்கும் !
“பாஸ்கள் சலுகைகள் ரத்து” !
சும்மா ஒரு பேச்சுக்குத்தான் !
வந்தவர்களை வரவேற்கும் !
கரும்புத்தோட்டம் !
இடையில் !
படுத்துக்கிடக்கும் !
வெள்ளரிக்காய் !
அப்புறம்.. !
வத்திப்போன பூவல் !
கோடையின்வெளிச்சம் !
காய்ந்து சுருங்கிப்போன !
புடலங்காய் !
காவல்காரண் கண்டுகொள்ளவே இல்லை !
கோடையோடு கோபம் !
எட்டிக்கடந்தால் !
கரும்புத்தோட்டம் !
மூடிக்கிடக்கும் வாய்க்கால் !
பாம்புகளின் நடமாட்டம் !
பக்கத்து தோட்டக்காரனின் !
பாய்ச்சல் தண்ணி !
வாய்க்காலுக்குள் !
சுதந்திரமாய்.. !
வந்துவிழும் !
அவனால்தான் !
அந்தகரும்புக்கே சுவை.. !
தோட்டக்காரன்.. !
காவல்காரனாய்
எம்ஸீயே.பரீத்

Related Poems

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.