என் காதலா..
சூழ்நிலைச் சூறாவளியில்
தொலைந்து போனவனே..
உன் கைப்பற்றி நடந்த போதுதான்
நான் பாதுகாப்பாய் உணர்ந்தேன்..
கனவுகளால் கோட்டைகட்டி
உத்வேகம் கொடுத்தாயே,
உற்சாகம் விதைத்தாயே..
தெரியுமா?
இப்போது உதாசீனம் மட்டுமே
ஒவ்வொரு நாளும்...
மறக்கத் தீர்மானித்தேன்..
நிகழ்வுகள் மீண்டும் உன்னை
நினைக்க வைக்கிறது...
நிகழ்காலம் நெருப்பானதால்
இறந்தகாலம் உயிர்த்தெழுகிறது...
மயக்கத்திலோ மனதாரவோ...
உறுத்தாத சராசரி அழகு என்னை
'உலக அழகி' என்றவனே...
ஒருவேளை,
நாம் திருமணத்தில் இணைந்திருந்தால்
நம் காதல் இறந்திருக்குமோ...?
வேண்டாம் காதலா...
நீ தொடர்புகொள்ள முடியாத தூரத்திலேயே
தொடர்ந்து இருந்து விடு
சூன்யா