காரெனும் காலம் வந்தவுடன்
கருநிற மேகம் வந்துவிடும் பருவ மழையும் பொழிந்துவிடும்
பெரிய நிலமும் செழித்துவிடும்
பட்டுப் பயிரும் வளர்ந்துவிடும்
காட்டு மரமும் தளிர்த்துவிடும்
வந்த பஞ்சம் பரந்துவிடும்
வனத்தில் விலங்கும்
மகிழ்ந்துவிடும்
பருவ காலம் ஆறுண்டு
பரந்த எங்கள் நாட்டினிலே
நிலமோ ஐந்து வகையுண்டு
நீண்ட எங்கள் நாட்டினிலே
அனைத்து வகையில் பயிருண்டு
அழகிய எங்கள் நாட்டினிலே
அத்தனை இயற்கை அழகுண்டு
அந்த காலத்து நாட்டினிலே
அள்ளிக் குடித்த ஆறுமில்லை
துள்ளிக் குதித்த
கிணறுமில்லை
இவைகள் எங்கே
தெரியவில்லை
ஆள்துளை இல்லா வீடுமில்லை
பழய பெரிய காடில்லை
பழம் பெரும் மரங்களில்லை
இவைகள் எங்கே
தெரியவில்லை
மனைகள் விளைவதில்
மாற்றமில்லை
வெண்பா பனித்துளி எல்லாமும்
காணா போனது ஏனென்றால்
பசுமை குடிலின் வாயுவெல்லாம்
பெருகி வருகிற காரணம்தான்
பூமி வெப்பமோ உயரியதால்
கடலின் மட்டமும் உயரியதே
மரத்தின் வளமோ குன்றியதால்
மழையின் வளமும் குன்றியதே
மழையின் வளமோ
மறைந்ததால்
மண்ணின் வளமும் மறைந்ததே
விண்ணை தினமும்
காண்கையில்
விண்மீன் தோன்றி மறைகிறது
உதித்து மறைகிற செங்கதிரும்
இரவில் வருகிற வெண்மதியும் இவற்றில் ஏதும் மாற்றமில்லை
உன்னில் இத்தனை மாற்றங்கள்
இதற்கு எல்லாம் காரணம்தான்
இங்கு வளர்ந்த பிள்ளைகளே
மனிதன் உன்னை காத்திடுவான்
என்று எண்ணி ஏமார்ந்தாய்
உந்தன் அழிவை
அக்கொடியவன்
அறிவின் வளர்ச்சி
என்றெல்லாம்
கூறி நடத்திய ஆய்வெல்லாம்
அவனது அழிவில் முடிந்ததாம்
பார்க்க இயலா உயிருக்கு
பெரிய இறையாய்
ஆகிவிட்டான்
இதன்பின் வருகிற காலமாவது
இயற்கை அண்ணை
வாழவேண்டும்
அவள்தான் உன்னைக்
காத்திடுவால்
அந்த பெரிய அழிவிலிருந்து
_ அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
சுகுமார் கோ