குப்பை மேடுகளாய் குவிகிறது தெருவோரம்
ஆதரவு இல்லாமல் பல்லாயிரம் தமிழ் பிணங்கள்
ஈழத்தில் நடக்கும் தமிழன படுகொலைகள்
உலகமெல்லாம் தெரிகிறது
இங்கிருக்கும் தமிழகத்தில்
என்னவென்றே தெரியவில்லை
தமிழகம் கைவிட்டதால்
தமிழினமே அழிந்தது
தமிழன் என்ற உணர்விழந்து
பிழை ஒன்று செய்தது
உலகெங்கும் தமிழ் சொந்தம்
நம்மை கேள்வி கேட்ட்குது
உணர்வுள்ள நெஞ்சமெல்லாம்
தலை குனிந்து நிற்குது
பாதுகாப்பு வளையதுக்குள்ளே
கொத்து குண்டு வீசிகிறான்
பாதுகாப்பு சபைகள் எல்லாம்
பார்த்துக்கொண்டு இருக்குது
அடக்கம் செய்ய சொந்தம் இன்றி
அனாதைகளாய் மடிகின்றான்
கேள்விகேட்க நாதிஇன்றி
சொந்த நாட்டில் சாகிறான்
சிங்களனின் சூழ்ச்சிஇனில்
உலக நாடு வீழ்ந்தது
வீரமிக்க தமிழினமே
உலக வரைபடத்தில் அழிந்தது
தமிழகத்து தமிஜினமாய்
நடமாடும் பிணங்களாய்
நாமிருந்து என்ன பயன்
சொரணை கேட்ட ஜென்மமாய்
ஆட்சிகட்டிலில் அமர்ந்து கொண்டே
லட்சம் கொலைகள் செய்கிறான்
லட்சியத்திற்காக வாழ்ந்த இனத்தை
தடை விதித்தே அழிக்கிறான்
வாழ்ந்த இனம்
வீழ்ந்த கதை
நம் சந்ததிகள் படிக்குமே
தமிழினத்தை தாரை வார்த்த
தமிழகத்தை ஏசுமே
செத்ததெல்லாம்
பிணங்களல்ல
சொரணை உள்ள தமிழினம்
நேசம் காட்ட உறவிருந்தும்
தாய் மண்ணுக்காக வீழ்ந்திட்டான்
தேசம் காண நினைத்த இனம்
வேரறுந்து நிற்குது
இனமொன்று வாழ்ந்தது
தன்னுரிமைக்காக எழுந்தது
உலக நாடு தடை விதித்ததால்
வழியின்றி வீழ்ந்தது
நம்பியிருந்த சொந்தமெல்லாம்
நடுத்தெருவில் விட்டது
உலகம் செய்த துரோகத்தினை
நினைத்து நெஞ்சம் சுட்டது
மிச்ச மீதி உள்ள தமிழன்
அடிமை விலங்கை உடைத்திடுவான்
சிங்களனக்கு அடிபணிந்து
தமிழ் புலிகள் வாழாது
செந்தில் குமார்