குடித்த பால் தயிராகி வாயில் வழிய
தாய் மடியில் தூங்கியிருந்தேன்
படித்த பாடம் நினைவில் நிற்க இரவு
முழுவதும் படித்த புத்தகத்தில்
தலைசாய்ந்திருக்கிறேன்
எடுக்க மனமில்லாமல் மனைவியின்
மடியில் தலைவைத்து மயங்கியிருந்தேன்
இருக்கும் ஒருமகனை படித்து முன்னேற
உழைத்து களைத்து தூங்கியிருந்தேன்
வரவிருக்கும் நாளில் அவன்
பொறுப்பேற்பான் என்று
சா.துவாரகை வாசன்