நவராத்திரி என்பார்,
நவராத்திரியின் கடைசிநாள்
ஆயுதபூஜை என்பார்.
அன்றைய நாளில்
அறுசுவை படையலிட்டு,
இருசக்கர வாகனம் முதல்
நாற்சக்கர வாகனம் வரை
கதவு முதல் கணினி வரை
பட்டையிட்டு பொட்டுவைத்து வணங்குவர்;
காரணம் கேட்பினோர்
கலைமகள் வாசம்புரியா பொருளில்லை
அவனியில் என்பர்.
வையத்து மாக்களே!
உண்மையுரைப்பேன் கேளிர்!
பட்டையிட்ட ஒரு கருவியேனும்
நாம் கண்டறிந்தோமா?
சைக்கிளை கண்டுபிடித்த டிரயஸ்
ஆயுதபூஜை கொண்டாடினன் அல்லன்;
தொலைகாட்சியை கண்டுபிடித்த
பெயர்ட் ஆயுதபூஜை கொண்டாடினன் அல்லன்;
இறையுருவப் படங்களின் முகப்பு கண்ணாடியை
கண்டுபிடித்த சீனனும் ஆயுதபூஜை கொண்டாடினன் அல்லன்;
இருள் கிழித்து செயற்கையொளியூட்டிய எடிசனும்
ஆயுதபூஜை கொண்டாடினன் அல்லன்;
குறைதபட்சம்
சூடத்தையாவது கண்டறிந்தோமா?
சூடத்தின் மூலப்பொருளே
19ஆம் நூற்றாண்டில்தான் கண்டறியப்பட்டது;
தீக்குச்சியின் மருந்தையாவது?
அதையும் சீனர்கள் விட்டுவைக்கவில்லை.
ஓலைச்சுவடிகலேயின்றி
கலைமகள் வாசம்புரிவதாய் கூறும் புத்தகத்தின்
காகிதங்கள் கூட நாம் கண்டைறிந்தது கிடையாது!
இப்படி அறிவியலின் துணை கொண்டு கண்டறிந்த
அனைத்து கருவிகளுக்கும்
பழைய முலாம் பூசி
புதுப்புது கதைகள் புனைந்தால்
ஓரறிவு உயரினம்கூட நமைபார்த்து நகைக்காதா?
அயல்நாட்டினவன் நம்மை
அசட்டை செய்வதில் வியப்பேதும் இல்லை.
மண்வெட்டியும், ஏற்கலப்பையும்மேயின்றி
நாம் உருவாகிய கருவிகள் இன்னதென்று
அறுதியிட்டு கூறுதற் கடினம்.
எதிர் காலத்தைப்பார்!
சந்திரனில் நிலப்பட்டா விற்றாகிவிட்டது,
கிரகங்களில் பிராணவாயுக்கான
தேடல் தொடங்கிவிட்டது.
"கண்டுபிடித்துவிட்டோம்
ஹிக்ஸ் போசான்தான் சூட்சமபொருள்"
என்ற விவாதம் தொடங்கிவிட்டது.
இன்னமும்
இருண்ட வீட்டில் அடைந்துகொண்டு
வெளிச்சத்தை தேடுவதில் பயனேதுமில்லை;
இறந்தகாலத்தின் கதவுகள்
இன்னமும் பூட்டப்பட்டுதான் இருக்கிறது;
உள்ளிருந்து தட்டுவதில் பயனேதும்மில்லை
உடைத்துக்கொண்டு வருவதேயன்றி
வேறு வழியேதுமில்லை.
பூட்டிய கதவுகள் உடைபடட்டும்;
இனியாவது புதுபாதையில் வையம் செழிக்கட்டும்
அரி பாரதி