ஆற்றுக்குத் தெரியுமா
ஆற்றைக் கடக்க
பயப்படுகிறேன் என்று.
இறங்கினால்
சங்கமமாகும் இடத்தில் என்னையும்
சேர்த்திடுமென்று பயம்.
அப்படித்தான்
என் பாட்டனும் என் சித்தப்பனும்
என் பாட்டி சொன்னது
நினைவிலிருந்தும்
துணிச்சலுடன் இறங்க
தொண்டைக்குழி தட்டியபோது
கேட்காமலேயே
கைகள் முன்னே சென்று நீரை அழுத்தி
உடலை மேல் கொணர்ந்தேன்.
நீர் சென்று வயிறு உப்பி
மூச்சு முட்டியது.
முடிவு தெரியும் நிலையில்
பாட்டி
தம்பியிடம் சொல்லக்கூடும்
அமானுஷ்யன்