புலிவால் பிடித்தோமடா! - ஆர்.எஸ்.கலா, இலங்கை

Photo by Getty Images on Unsplash

வெளி நாட்டு வாழ்க்கை!
விவகாரம் நிறைந்ததடா..!
விட்டெறியும் காசை!
நோக்கி செல்லும் !
போது விட்டுச் செல்வது!
உறவை மட்டும் இல்லையடா..!
உணர்வு உணர்ச்சி ஆசை!
அதனுடன் சேர்த்து நாம்!
நம் நாடு உயிருடன் !
திரும்புவோம் என்ற நம்பிக்கை!
இத்தனையும் விட்டுச்சென்றால்!
கிடைப்பது வெளிநாட்டு!
வாழ்க்கை..!
வாழ்க்கை அது என்ன வாழ்கையடா!
வாய்திறந்து விவாதிக்க முடியாத!
ஓட்டமடா..!
உட்கார முடியாத உழைப்படா!
உறவுக்கு மடல் போட முடியாத!
பணிச்சுமையடா..!
விட்ட காசை எடுக்க வேண்டும்!
என்ற வேகமடா அடகு வைத்த!
பத்திரம் மீட்ட வேண்டும் என்ற!
இலட்சியமடா..!
கட்டிய மனைவியைக் கனவில்!
கட்டி அணைத்து பாசமான!
மகளுக்கு நினைவில் முத்தம்!
கொடுத்து காச்சி மூச்சி என்று!
கத்தும் சத்தங்களுடன் கண்!
மூடி தூங்கும் நிலைமையடா..!
இளமை ஆசைகளை பலியாக்கி!
இளமையை இரையாக்கி!
இன்பத்தைக் கொலை செய்து!
துன்பத்தில் துவண்டு எடுப்பது!
தான் வெளிநாட்டுப் பணமடா...!
விபத்து என்று ஒன்று நடந்து!
இறப்பை நோக்கினால் இறுதிக்!
கடமையும் நமக்கு சரிவரக் கிடைப்பது!
இல்லையடா..!
தொட்டு உடலை துடைக்க!
உறவுகள் பக்கம் இல்லையடா!
கொட்டி விடுவான் அரபி ஏதோ!
ஒரு திரவியத்தை மூடி விடுவான்!
பெட்டியை..!
போட்டு விடுவான் பெட்டியை!
பொதியோடு பொதியாக மாதங்கள்!
பல கடந்து நாடு வந்து சேரும் உடலடா..!
உடல் அடக்கம் இன்றி கடைமைக்!
காரியங்களும் கைவிடப்பட்டு!
உறவுகள் கவலையில் இருந்து!
விடுபட்ட பின்னே நம் உடல்!
கிடைப்பது திண்ணமடா..!
மனைவி மக்கள் புகைப்படம்!
பார்க்க ஆசை என்று அனுப்புங்கள்!
என்று கூறவும் தைரியம் இல்லையடா!
பாவிகள் சிலர் கையில் சிக்கினால்!
என் மனைவி மானம் புகையாக !
போகுமடா..!
ஊரார் கண்ணுக்கு தெரிவது!
எங்கள் ஊதியம்!
ஓட்டு வீடு கிடைத்தமையால்!
உறவுக்கு குதூகலம்!
உண்மை நிலவரத்தை மறைத்து!
உள்ளுக்குள் அழுது உடலை!
வருத்தியே வாழ்வது எங்கள்!
வெளி நாட்டு வாழ்க்கையடா..!
திணார் டாலர் ரியால்!
கொடுக்கும் வலி கொஞ்சம்!
இல்லையடா சொல்லவே வார்த்தை!
நிறையவே உள்ளதடா அதுக்கு!
எல்லையே இல்லையடா...!
கவிக்குயில் ஆர் எஸ் கலா!
இலங்கை தளவாய்!
ஆர்.எஸ்.கலா, இலங்கை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.