கண்டாங்கி கட்டி!
வந்த பொண்ணு!
நான் உற்று!
நோக்கினேன்!
அவள் கண்ணை!
ஏறியது போதையடா!
இறங்கவே இல்லையடா!
மயங்கியே சாந்தேன்!
அவள் மடியினிலே..!
கூடை சுமக்கும்!
கூடாரப் பெண் தானே!
என்று இழக்காரமாக!
நின்று நோக்கினேன்!
அன்று வழுக்கி விழுந்தேன்!
அவள் நினைவினிலே!
இன்று......!
கொட்டகை வாசி தானே!
தொட்டுப்புட்டு விட்டு!
விடலாம் என்று!
கிட்ட நெருங்கிச் சென்றேன்!
சுட்டெரிக்கும் அவள் !
மூச்சுக் காற்றில் சிக்கித்!
தவித்தேன்...!
சத்தம் இன்றி!
சமாதானக் கொடி!
ஏற்ற நினைத்தேன்!
காதல் என்னும்!
வசனம் பதிவு செய்து!
அவளிடம் கொடுத்தேன்...!
மறுப்புக் காட்ட வில்லை!
வெறுக்கவும் இல்லை!
முகம் சிவக்கக் கண்டேன்!
கோபமா..வெட்கமா நான்!
அறியேன் இப்போது!
நான் நிட்கவா ஓட வா!
ஒன்றுமே புரியலயே..!
வெட்டிக் கொடுக்கும்!
மண்ணைக் கொண்டு!
கொட்டும் குப்பத்து!
வாணியே .. நான் கொடுப்பேன்!
நெற்றிக் குங்குமம் உன்னை!
அழைப்பேன் என் இல்லத்து!
ராணியாவே...!
கூட்டத்தைக் கூட்டாதே!
குடும்பத்தை அழைக்காதே!
காட்டிக் கொடுக்காதே கட்டில்!
இடுவேன் நான் சத்தியமாய்!
பத்தினியாய் உன்னை !
மெச்சுவேன் பத்திரமாய்...!
வெட்டருவாள் தேடாதே!
வெட்கம் கொண்டு ஓடாதே!
வெந்துபோய் இருக்கேன்!
நான் உன்னாலே...!
பட பட என்று உன்!
இமையை மூடி திறக்காதே!
வெட வெட என்று !
நடுங்குகின்றேன் நான்!
என் உள்ளே....!
அட கல கலவென அவள்!
சிரித்து விட்டாள் இனி!
மள மள வென்று வளரப் !
கோகின்றது என் காதல் மரம்!
குளு குளு என்று இப்போது

ஆர்.எஸ்.கலா, இலங்கை