தியாகம் - ஆனந்தன்

Photo by Jr Korpa on Unsplash

வியர்வையை இரத்தமென சிந்தி !
உடலை வில்லாய் வளைத்து !
நிலம் உழுதவர் சிலர் !
உலி அடிக்கும் கனத்தில !
விரலை நசுக்கிக்கொள்ளும் !
தட்டர்கள் சிலர் !
தன் பசி அடைக்க !
மாட்டின் பசியடைத்த !
மயக்கத்தில் சிலர் !
உண்மையில் !
தலைக்கு மேல் வேலை !
செய்தவர்கள் சிலர் !
மாடு கட்டி அதே !
இடத்தில் சுற்றி சுற்றி !
செக்கடித்தவர்கள் சிலர் !
அங்கங்கு சிலர் சேர்ந்து !
பலராகக் கூடி இருந்தனர் !
அந்த மாலைப்பொழுதில் !
நான்கு பல்லாங்குத் தாண்ட !
மிதி வண்டி மிதித்து !
வந்து சேர்ந்தார் !
அடுத்த கிராமத்து !
ஆசிரியர் !
அங்கு நடக்கப் போவது !
மாலை வகுப்புக்கள் !
முதியோருக்காக !
அரசியல் வாதிகள் !
படிக்காவிட்டால் என்ன !
நம் கிராமமாவது படித்திருக்கட்டுமே... !
நூறு சதவிகித கல்விக்கு !
என அவர் சொல்லக் !
கேட்டிருக்கிறேன் !
தன் கடமை செய்ய !
கையூட்டுக் கேட்கும் !
காலத்தில் !
தன் நேரத்தை !
செலவு செய்து !
பலனையும் எதிர்பாராமல் !
தியாகத்தை கடமையாக !
செய்பவரை எதில் சேர்ப்பது ?
ஆனந்தன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.