ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள்

காத்து இருக்கிறேன்

உமா
பிரிந்து விட்ட பின்பும்
காத்து இருக்கிறேன்!
உன் நினைவுகளின்
வருகைக்காக

தேசிய கீதம்

வி.நடராஜன்
அரசியல்வாதிகளை
நாற்காலியை விட்டு
எழச் செய்து விடுகிறது
தேசிய கீதம்

குட்ஸ் வண்டி

நவின்
வாழ்க்கைச் சுமைகளை
வரிசையாகச் சுமக்கும்
ஏழை விவசாயி….

குட்ஸ் வண்டி

கண்ணீர்த்துளிகள்

மணிகண்டன் மகாலிங்கம்
பிரிவின்
சொந்தம்...



"கண்ணீர்த்துளிகள்"

மயிலே இறகாய்

ஆ. மணவழகன்
புத்தகத்தின் நடுவில்
புதைத்து வைத்த மயிலிறகு
குட்டி போடவில்லை இன்னும்...
இறகு கொடுத்த உன் நினைவோ
'குட்டி மேல் குட்டி'

அடி, உதை, குத்து

ஜெய் ( jaisapmm )
அடி, உதை, குத்துக்கு…
உடம்பு வலித்தும்
உள்ளம் வலிக்கவில்லை…
பேரப்பிள்ளைகளின் செல்லம்?

ஜன்னல்

சலோப்ரியன்
நீ
ஜன்னலின் வழியே
எட்டிப் பார்த்த பொழுதுகள்
சதுரமாய் ஒரு வானத்தை
எனக்கு ஞாபகப்படுத்தும்

கவிதையின் கடைசி வரி

தமிழ்தாசன்
கவிதையின் கடைசி
வரியில் தான்
கவிஞனின் கர்ப்ப
வலியின் உச்சம்

உன் நினைவுகள்

ஜெயந்த் கிருஷ்ணா
தோற்றாலென்ன
வெற்றிப் புன்னகையோடு உன்
நினைவுகள்

ஆண்டின் இறுதி

பிரபா
ஆண்டின் இறுதியில் என்னைப் பார்த்து
காலண்டர் கேட்டது

என்னைத் தவிர வேறென்னத்தை
கிழித்தாய்?