ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள்

வெறுமை

அக்மல் ஜஹான்
எப்போதும் முடிவதில்லை.....!
இயந்திரமாய் வாழ்ந்து முடித்த பின்பும்!
இதயம் நிரம்பாத!
செயற்கை வாழ்வின்!
வெறுமைகள்

விபத்து

நித்தியசார்லஸ்
கோயிலை கண்டதும்
டூவீலரில்சென்றவன்  
கையெடுத்தான்.
பின்னால் வந்தவன்  
அவன் காலெடுத்தான்.
வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்தது,  
கோயில்சிலைகள்

பனித்துளிகள்

நவின்
வண்டுக்
காதலனைக் கண்டதும்
மலருக்குப் பதட்டம்
வியர்வையாய்….

பனித்துளிகள்

காலங்களின் கோலங்கள்

முத்து கருப்புசாமி
சரியான  மணவாளன்
கிடைக்காமல்  போனதால்  -
முதிர்  கன்னியானது ...
மலையடிவாரப்
படிக்கல்

மாற்றம்

நளினி
அருகில் இருக்கையில்
உனை பார்க்க தவிர்த்த கண்கள்
தொலைவில் இருக்கையில்
உனை பார்க்க தவிக்கின்றன

நகைப்பா

மாமதயானை
மழைக்காரன் வருகின்றான்
மெல்லமெல்ல
எழைகளின்புன்னகையைப்போல

...

எப்பொழுதும் அலங்காரத்துடன்
வாழ்கிறார்கள்திருநங்கைகள்
சாயம்போனவாழ்க்கை

...

அப்பா என்னை
அடிக்கும்பொழுதெல்லாம்
அம்மாவிற்கும் வலிப்பதெப்படி

...

கனவில் தினமும்
தோள் சாய்கிறாள்
விவாகரத்தான மனைவி

...

ஊர்சுற்றும் பிள்ளையின்
வேலைக்காக
கோயில் சுற்றும் அம்மா

...

அடிக்கடி வருவார்
அம்மாவின் வார்த்தைகளில்
இறந்துபோன அப்பா

...

அம்மாவின் கடுதாசி
பாதியில் படிக்கிறது
என்னோடு கண்ணீரும்

...

கடும் வெய்யிலிலும்
குளிர்கிறது மனம்
அருகில் மனைவியின் தோழி

...

கள்ளகாதலியின் முத்தம்
காய்வதற்கு முன்
மனைவியின் ஞாபகம்

...

எனக்கு பிடித்த உன்னை
எப்படி பிடிக்காமல் போனது
உன் கணவனுக்கு

...

பூவா தலையா
பூ கேட்கிறாள்
விதவை

...

முதியோர்களின்
முழுநேரப்பேச்சிலும்
இளமைக்காலம்

...

கல்லும் இருந்தது
நாயும் இருந்தது
கைஉடைந்த நேரத்தில்

...

அன்னையும் பிதாவும்
படித்துக்கொண்டிருக்கிறது
ஆனாதைக் குழந்தை

...

அதிவேகமாய் ஓடினான்
ஓட்டப்பந்தய வீரன்
அடுத்த வீட்டுப்பெண்ணுடன்

...

மாற்றுஅறுவை சிகிச்சை
செய்துமுடித்தார் மருத்துவர்
நோயாளியைமாற்றி

...

ஏட்டிக்குப் போட்டி பேசும் பாட்டி
இறந்த பிறகும்
மூடவில்லை வாய்

...

வாய்ப்பாட்டு பாடுபவனின்
வயிற்றிலும் பாட்டிலும்
பசி

...

நன்றியுள்ள நாய்
வாலை ஆட்டியது
திருடனுக்கு

...

மனதில்
எழுதுகோல் பற்றிய கவிதை
மைதீர்ந்த பிறகும்

மவுனம் தந்த பரிசு

மணிகண்டன் மகாலிங்கம்
காதலியை பிரிந்த பிறகு

பிரிவின் நினைவாக

மவுனம் தந்த பரிசு...

கண்ணீர்த்துளிகள்!

ஏழை

ரசிகவ் ஞானியார்
மகள் பூப்பெய்திவிட்டாள்
தாய்க்கும் இனி...
தாவணிதான்

இறுதிக் கண்ணீர்த்துளி

நவின்
இந்தியத் தாயின்
இறுதிக் கண்ணீர்த்துளி....

இலங்கை

நீரோடை

நவின்
அழுதவானம்
எழுதிப்பார்க்கும்
அந்தரங்க வரிகள்….

நீரோடை