இருள் தன்னோடு எடுத்து வந்து !
என்னுள் வைத்தது !
அழுத்தம் தாங்காமல் !
கனவுகள் கிழிந்து போய் அறை எங்கும் !
சுவாசிக்கப்பட்ட காற்றாய் !
நிரம்பிக் கிடக்கிறது !
நடு நிசி ஆந்தையின் !
அலறலாய் சுமை தாங்கா முனகலும் கொஞ்சம் கேட்கும் !
பெரு வெளியில் !
என் இருப்பை !
அதுவே !
உறுதிப்படுத்துகிறது !
தன்னைத் தானே தின்னும் !
சக்கரத்தின் !
ஒரு ஓரத்தில் நானும் !
தின்று முடியும் போது !
இதுவும் தீரும்
வசந்த் கதிரவன்