சாய்ந்து கொள்ளச் சுவரின்றி!
சரிந்து தாழ்ந்த மொட்டை மாடி!
மழைத் தாரை ஈரம் பட்டு!
மதிலோரம் படர்ந்த பாசி!
காய்ந்து நிற்கும் கொம்பைச் சுற்றி!
இழைந்து நிற்கும் கொடி!
நீர் சுமந்து களைத்தபடி!
மெல்ல நகரும் மேகம்!
சிறகசைத்து மிதந்து செல்லும்!
சாம்பல் நிற பறவைக் கூட்டம்!
குனிந்து தலையாட்டிக் கொண்டு!
கொட்டிலடையும் மந்தை!
புறங்கையில் கண் துடைத்து!
கலைந்த மயிரை சிலுப்பிக் கொண்டு!
களைத்துத் திரும்பும் பள்ளிச் சிறுவன்!
சுவரோரம் முதுகு உரசி!
சோம்பல் முறித்து நகரும் பூனை!
கட்டிக்கொண்ட முழங்காலில்!
பதித்துக் கொண்ட கன்னம்!
சோர்ந்த மனதுக்கு!
சுகமாகத்தான் இருக்கிறன....!
பதிவுகளும் படிமங்களும்.....!
--- உதயச்செல்வி
உதயச்செல்வி