யான் கவிஞன் !.. ஏனோ தெரியவில்லை !!
01.!
யான் கவிஞன் !!
-------------------------!
அறியா சின்னஞ்சிறு மழலைப் பருவத்தில்!
பெற்றோர் இட்ட இயற்பெயர் துறந்து!
என் இயல்பு அறிந்து நான் வைத்து கொண்ட!
புனைப் பெயரே என் முதல் கவிதை படைப்பு !
நிலத்தில் நின்றபடியே நிலவைத் தொட்டு!
காளைப்பருவமதில் காதலிக்காமல் காதலித்து!
உள்ளம் நோக கற்பனை மயக்கம் கொண்டு!
கவிமகவுகளை பெற்று எடுக்கிறேன் ஓர் பெண்ணாய்!
பெண்ணே ஆணாய் ஆணே பெண்ணாய் உருமாறி!
நரைக்கிழவன் இளங்குமரனாகி குதூகலித்து!
மகிழ்ந்து கற்பனையில் சமுதாய சீர்திருத்தங்கள்!
செய்து அவற்றை நனவிலும் கொணர்ந்து மகிழ்ந்தேன்!
என் தோட்டத்தில் மல்லிகை மணம் வீசாது!
மனம் பேசும் ....மாமரக்குயில் இசை பாடாது!
இயற்கை வீணர்களை வசை பாடும்!
ஓசோன் படல ஓட்டை அடைக்கப்படும்!
உள்ளம் வாட்டும் காதல்நோயா அல்லது உடல் வாட்டும்!
பிணியா கேட்டும் கிடைக்கலையா கடன் அல்லது விண்ணப்பம்!
போட்டும் வரலையா வேலை எதுவாய் இருப்பினும்!
என்னிடம் வந்து இளைப்பாறலாம் நீ!
மேகம் சுமக்கும் மழை போல் இந்த மண் சுமக்கும்!
மரம் போல் உன் சோகச் சுமையை நான் சுமப்பேன்!
காமதேனு கற்பகவிருட்சம் கொணர்வேன்!
உன்னை மகிழ்வித்து மகிழ்வேன் .!
ஏனெனில் யான் கவிஞன் !!
02.!
ஏனோ தெரியவில்லை !!
---------------------------------!
உடலும் உச்சியும் உயிரும்!
உஷ்ணமேறி உள்ளமும் கூட!
உச்சிசூரியனால் தகித்தது!
வியர்வை முதுகில் நேர்க்கோடிட்டது!
ஓர் கோடைக்காலப் பொழுதில் ....!
ஏனோ என் மனத்தில் கைகாட்டி!
மரமாய் கடமையாற்றும் போக்குவரத்துக்!
காவலரும் தொய்வுறும் மனதைத்!
தன் விரைப்பான சட்டையால் தேற்றும்!
சூடான இஸ்திரியாலனும் !
உருகும் தாரில் கருகும் வேளையில்!
கழுத்தில் கனம் சுமந்த காளையும்!
வந்து வட்டமடித்தனர் .. !
கோடை மடிந்தது ஊசி ஏற்றும்!
குளிரும் குதித்தது கனத்த கம்பளி!
ஆடையில் ஆமையாய்ப் புகுந்து!
புதைந்து .. பல்லும் கிட்டித்து கிழ!
ஒத்திகை பார்த்தப் பனிப்பொழுதில்!
ஏனோ உறைபனியாய் உறைந்து நிற்கும்!
எல்லைக்காவலரும் சல்லடையாய்ப் !
போன போர்வையை இழுத்துக் கால்!
மறைக்கும் சாலைச் சிறுவனும்!
நேற்று குட்டிப் போட்ட அந்த!
மண் நிறப் பூனையும் அதன் பிம்பங்களும்!
கண்ணில் வந்து நிழலாடின ...!
வண்ணக்கிளி சொன்ன ஆருட மொழியும்!
ராம வானரம் அடித்த வீர வணக்கமும்!
நல்ல பாம்பு எடுத்த வெற்றிப் படமும்!
நடிகையின் யெளவன வனப்பும்!
அதைக் கண்ட களிப்பும்!
அவற்றின் வயிற்று நெற்ப் பசியிலும்!
ஏனோ கரைந்தே போயின!
மிச்சமில்லாமல்
ஸ்ரவாணி