ஆண்களுக்கும் தான் !
வேதனை பெண்பார்க்கும் படலம்... !
காலையில் எழுந்து மீசைதிருத்தி !
முகம்வழித்து !
துணி தேய்த்து !
அலங்கரித்து பரிட்சைக்கு செல்லும் புது மாணவனின் !
மனோபாவத்துடன் !
பெண் பார்க்க போனேன்.. !
ஆட்டோகாரனிடம் பேரம் பேசி !
தேய்த்த துணி கசங்காமல் !
உடலை உள்ளே திணித்து !
இறங்கியவுடன் தலை சரி செய்து !
பெண் வீட்டில் நுழைந்தால்.. !
முன்னமே புகைப்படம் அனுப்பியும் !
பெண்ணின் உறவினர் கேட்பார் !
இதில் யார் பையன்? !
கூச்சமாய் கொஞ்சம் தெளிந்து !
இருக்கையில் அமர்ந்ததும் !
பெண்ணின் அப்பா ஆரம்பிப்பார் !
பையனுக்கு எங்கே வேலை? !
என்ன சம்பளம்? !
என்ன படித்திருக்கிறான்? !
கேள்விகள்... கேள்விகள்.... !
இவையெல்லாம் முடிந்து !
பெண் வருவாள்.... !
மற்றவர் நம்மை கவனிக்கிறார்கள் !
என்ற கூச்சத்துடன் ஒரு படப்படப்புடன் இருக்கையில் !
பெண் வந்து சென்றிருப்பாள் !
சரியாக பார்க்கவில்லையோ.... !
பெண்ணிடம் ஏதாவது பேச !
வேண்டும் இல்லையெனில் ஊமை என்று !
ஆகிவிடும் நம் நிலைமை !
அதற்காய் அசட்டுதனமாய் சில கேள்விகள் கேட்டதும் !
முடிவுக்கு வரும் பெண்பார்க்கும் படலம் !
வெளியே வந்ததும் !
பெண் கொஞ்சம் உயரம் கம்மி தான் !
என் அம்மா.. !
பெண்ணின் அப்பா சரியாக பேசவில்லை !
என் அப்பா.. !
பெண்ணின் முடி நீளமில்லை !
என் தங்கை.. !
ம்.......... !
அடுத்த வாரம் எந்த வீடோ? !
எங்களுக்கும் வேதனை தான் !
பெண்பார்க்கும் படலம்
ரா.கிரிஷ்