சுயம் இழந்து தவிக்கும்....!
முகம் இன்றி வருந்தும்....!
ஆயிரங்களில் ஒன்று...!!!!
கடமைகளில் கவலைகளில்!
கவிதைகள் மறந்தன...!
அடுப்படிகளில் வேலைகளில்!
ஆசைகள் தொலைந்தன...!
எனக்கென்ற வார்த்தைக்கு!
எதிர்ப்புகள் வந்தன...!
புரிதல்கள் இருந்தும்!
பூகம்பங்கள் தோன்றின...!
எரிமலை குழம்புகளாய்!
வார்த்தைகள் எரித்தன...!
அன்பினை நட்பினை!
அலைகள் அடித்தன...!
உண்மை நட்பு கொச்சை பட்டது...!
உதிர்ந்த வார்த்தைகள் மனதில் ரணமாய்...!
என் முகம் எங்கே?!
உன் முகமே என் முகமாய்...!
நம் பெண் முகமே என் முகமாய்...!
இருப்பினும்...!
என் அன்பும் உயிர் காதலும் உனக்கு மட்டுமே!
என்றென்றும்...!
முகம் தொலைத்த எனக்கு!
முகம் தெரியும் கண்ணாடியாவது பரிசளிப்பாயா....!
இருபது வருட காதல் கணவனே....?!
--புதுவை பாரதிசோமசுந்தரம்
புதுவை பாரதிசோமசுந்தரம்