>> புதியமாதவி, மும்பை !
எப்போதாவது வருவார் !
எங்கள் ஊர்த்தேடி !
எங்கள் அப்பா. !
எங்களைப் பார்க்கவே !
எப்போதும் வருவதாக- !
வந்ததாக- !
இப்போதும் !
சொல்லிக்கொண்டிருக்கிறாள் அம்மா. !
அப்பா.. !
வரும்போதெல்லாம் !
வந்து நிறையும் !
கார்களும் !
கரைவேட்டிகளும். !
அப்பா வாங்கிவந்தப் !
பொம்மைகள் !
பழசாகி உடைவதற்குள் !
புதிதாகக் கிடைக்கும் !
எங்கள் வீட்டில் !
குட்டிப் பாப்பா. !
----------------------- !
அப்பாவின் அருகிலமர்ந்து !
அரசியல் பேச !
ஆசைப்பட்டது நடக்கவில்லை.. !
அப்பாவின் தோள்களில் !
எப்போதும் தொங்கும் !
நீண்ட நேரியலை !
இழுத்துப் பிடித்து !
ஊஞ்சலாக்கிய !
கனவுகள் !
கனவுகளாகவே முடிந்துப் போனது.. !
அப்பாவின் சித்தாந்தங்களை !
என் கேள்விகளால் !
துளைத்து எடுத்து !
அப்பாவுக்கு வாரிசாக !
போராடியதெல்லாம் !
உறவுகளின் சிறையில் !
உடைந்துப்போனது. !
இப்போது- !
நானும் அப்பாவாகி !
எல்லாம் கொடுத்ததாய் !
ஆனந்தமடைவதில் !
அர்த்தமில்லை. !
என் பிள்ளைகளும் !
சொல்கிறார்கள்.. !
எங்களுக்குள் !
இருக்கிறதாம் !
தலைமுறை இடைவெளி! !
!
-------------------- !
பத்து மணிக்குள் !
அவர்கள் !
திரும்பாவிட்டால் !
பதைப் பதைக்கிறது !
எல்லா செய்திகளையும் !
வாசித்து தொலைக்கும் !
மனம். !
சத்தமில்லாமல் !
கைபேசியில் !
பேசுவது கண்டால் !
ரத்தம் கொதிக்கிறது !
எப்போதும் !
எதையாவது !
சாக்குவைத்து !
ஒழுங்குநடவடிக்கை எடுக்க !
ஆயத்தமாகிறது !
நாட்கள். !
இப்போதெல்லாம் !
என் முகத்தில் மட்டுமல்ல !
என் வசனத்திலும் !
வாழ்ந்து கொண்டிருக்கிறது !
என் அம்மாவின் சாயல்
புதியமாதவி, மும்பை