கடிதம் - பத்மபிரியா

Photo by laura adai on Unsplash

2, கடிதம் !
கவிஞன் என்றாய் !
“கவிதைகள் ஐம்பது ” என வெளியிட்டாய் !
இரண்டு கிடைத்தது, மற்றவை? !
புலம்பல்களுக்கும் சாடல்களுக்கும் !
புரட்சி தலைப்பிட்டிருந்தாய் !
காலரை தூக்கி கால் வீசி நடந்தாய் !
உணர்ச்சிபூர்வமானவன் கவிஞன் என !
உருவேறியிருந்த எங்களுக்கு - நீ !
ஒரு மின்சார தாக்குதல்!
சண்டையிடும் சகாக்கள் இருவரை !
சலனமின்றி கடந்து !
“ சமூக நீதி ” கவிதையை !
சமூகத்திற்கு அர்ப்பணித்தாய் !
முறுகக் காயும் வெயிலில் பிச்சை கேட்ட !
முதியவரை விரட்டி !
கார் கண்ணாடி உயர்த்தி !
“கருணைமழை” கவிதையை !
கண்பார்வையற்றோருக்காக என்றாய் !
வெகுளியுமில்லை, வேதாந்தியுமில்லை !
ஏழையுமில்லை, ஏமாளியுமில்லை -பின்பு !
எப்படி கவிஞனாவாய்? !
அடிப்படையில் மனிதனாகு !
அதன்பிறகு கவிஞனாகலாம் !
அச்சக உரிமையாளரான நீ !
கவிதைத் தொகுப்பென ஒன்று !
தாராளமாய் வெளியிடலாம் !
யாராலும் தடுக்க இயலாது - ஆனால் !
வாசகர் நலனுக்காக இரு வேண்டுதல் !
1.அட்டையின் மேல் “அபாயம்” என்றும் !
2. இரு கவி தந்த கவியின் பெயர் முன் “ உபயம்” என்றும் !
அச்சிட வேண்டும். !
!
By ( M. Padmapriya )
பத்மபிரியா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.