விடிவை நோக்கி - p.ஆயிஷாசுதன்

Photo by Sajad Nori on Unsplash

நடை எமக்கு பழகிப் போன ஒன்று !
நான் நடக்க என்னுடன் !
கூடவே நடந்தாள் அவளும் !
நடந்தோம் நடந்தோம் !
நாதியற்றவர்களாய் நடந்தோம்.!
கற்கள், முட்கள், கரடுமுரடு!
நிறைந்த பாதைகள் எல்லாம் !
தாண்டி நடந்தோம் வெந்து !
போன அவளது கால்கள்!
வெதும்பித் தவித்தன.!
ஆனாலும் நடையோ!
நாதியிழக்கவில்லை.!
நடந்தோம் நடந்தோம் !
தூர நடந்தோம்.!
எதற்காக நடக்கின்றோம்!
ஏன் நடக்கின்றோம் என்று!
புரியாமல் நாம்!
நடந்து கொண்டேயிருந்தோம்.!
என் அருகில் என் அவள் !
இருகின்றாள் என்ற துணிவு!
என் அவள் விழித்துக் கொண்ட !
வேளையில் மனக்கதவை !
திறந்து வெளியே வந்தாள்.!
நடையின் வேகம் குறைந்தது!
தூரங்கள் குறுகின!
தடைகள் உடைத்தெறியப் பட்டன … !
தடைகள் யாவும் பஞ்சு !
மெத்தைகளாயின …… !
இலக்கு என்பது தொலைவில் !
இல்லையென திடம் கொண்ட மனது !
மீண்டும் நடக்கலானது!
விடிவை நோக்கி !
நடை எமக்குப் பழகிப் போனவையே … !
ஆக்கம் !
P .ஆயிஷா !
ஸ்கந்தபுரம்
p.ஆயிஷாசுதன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.