கண்ணிரண்டும் காட்சியதான் காண முடியல
கருப்புவெள்ளை காட்சியினா என்னனு தெரியல
கண்ணிரண்டும் இல்லனாலும் கண்ணீர் குறையல
கூளிங்க்லாஸ் சூரியன பார்க்க உதவல...
சாலையத்தான் கடந்திடத்தான் உதவும் சாமியே..
காலையெது மாலையெது தெரிய வில்லையே
வாழையடி வாழையென விழியைக் கொடுங்களேன்
வாழ்க்கையினை கடந்திடத்தான் உதவி புரிங்களேன் !
இருக்கும்வரைக் கேட்டதுண்டா கண்ணை நாங்க?
இறந்தபிறகு ஒன்னுமட்டும் தந்து போங்க!
இருக்கும்வரைப் போற்றுவோம் உங்களை நாங்க...
இறந்தபிறகும் வாழலாமே வையத்தில் நீங்க !
சூரியனும் ஒளிகொடுத்துச் சாக வில்லையா ?
நிலவதையும் நினைத்துநினைத்து வாழ வில்லையா ?
மாறிமாறி விழிதீபம் ஏற்றிட வாங்க
மண்ணுக்குள் வீணாக விடுவதும் ஏங்க ?
தப்பு செஞ்சா தெய்வமும்தான் கண்ண குத்துமா !
அப்படின்னு சொன்னவன் என்ன சுத்தமா ?
இப்படியே இருட்டறையில் விடத்தான் சித்தமா ?
அன்புள்ளம் அடகுதான் போனதோ மொத்தமா?
பாண்டு