மழையின் கால்கள் - நாகரத்தினம் கிரு¤ஸ்ணா

Photo by Julian Wirth on Unsplash

தடதடவென!
மத்தள இடிகள்!!
தம்புராச் சுருதியில்!
தனிச் சுழற்காற்று!!
வான ராணியின்!
வாயசைவிலே!
சலசலவெனச்!
சங்கீதமழை!
நீர்க்கோடுகளாய்!
நிலத்திலிறங்கும்!!
இலையும் கிளையும்!
துளிகளை வாங்க,!
இன்பச் சுகத்தின்!
இறுதியில் வேர்த்து!
நின்று மூச்சிடும்!
மரத்தின் கால்கள்!!
குக்கூவென்றும்!
அக்கோவென்றும்!
குளறும் மொழியில்!
குளிரும் மழையில்!
கூடத்துடித்திடும்!
கொஞ்சும் கால்கள்!!
தாழங்குடையில்!
தலையை வாங்கி!
வீழும் துளிகளை!
விரலால் வழித்து!
உழவு மாட்டுடன்!
ஓடும் கால்கள்!!
மழையில் நனைந்த!
மகிழ்வுடன் கன்று!
தாய்ப்பசு மடியில்!
தலையைத் துவட்டத்!
தாய்மை சுகத்தில்!
தவித்திடும் கால்கள்!!
சவுக்கு மரங்கள்!
சாய்ந்திட அந்தச்!
சத்தம் கேட்டுப்!
பெண்முயல விலக,!
அச்சம் தவிர்க்கும்!
ஆண்மையின் கால்கள்!!
களையை முடித்து!
மழையில் நனைந்து!
முந்திக் குடையில்!
முகத்தை மறைத்துக்!
கனத்த மார்புடன்!
பிணக்கும் கால்கள்!!
கொட்டும் மழையில்!
கூச்சலிட்டோடி!
மூக்குச் சளியை!
முழங்கை வாங்க!
ஆட்டம் போடும்!
அறியாக் கால்கள்!!
மழையின் கால்களில்!
மகத்துவம் தேட!
ஒழுகும் துளிகளின்!
ஊடே புகுந்தேன்!!
காலடி மழையில்!
கரைந்து ஒளிந்து!
தாளடி இயற்கை!
தருமம் அறிந்தேன்!!
- நாகரத்தினம் கிரு¤ஸ்ணா
நாகரத்தினம் கிரு¤ஸ்ணா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.