நியாயங்கள்!
01.!
காணாமல் போன இதயம்!
-------------------------------------!
முகம் காணாமல் போன!
பழைய டைரிகளின் மடிப்புகளில்!
தேடித் தேடிப் பார்க்கிறேன்…!
நிறம் மாறிய தாள்கள் உடைந்து!
முகத்தில் புழுதியைத் துப்பிவிட்டுப் போகின்றன..!
தூசுகளின் பரண்களில்!
கண்கள் அலசி ஆழ்ந்து தேடுகின்றன…!
இன்னும் கிடைக்காமலேயே நழுவிக் கொண்டு செல்கிறது…!
காணாமல் போன வருடங்களைப் போலவே!
தொலைந்து போயிருக்குமோ..!
தேடிக் கொண்டே செல்கிறேன்!
நடந்த வழித் தடமெங்கும்….!
உன்னையும் அதனையும் தேடி!!
கொடுக்கப்டாமல் போன ஒரு கடிதம்!
இன்னும் இதயத்தின் இறுக்கத்தில்..!
எங்கேயாவது இருக்கும்… அதுவரை!
தேடிக் கொண்டே ………….!
!
02.!
எழுந்து வராத நியாயங்கள்!
----------------------------------!
அமர்ந்தவை அமர்ந்தபடியே இருக்கட்டும்…!
காதுகளைக் கிழிக்கும் குரல்களாகட்டும்!
கால்களை இழுக்கும் காரணங்களாகட்டும்!
கழுத்தை நெறுக்கும் கண்டனங்களாகட்டும்….!
எல்லாருக்கும் தெரிந்த ஒன்று உனக்கும் தெரியும்!
காலடியில் நசுக்கப்படும் உரிமைகள் பற்றி!
நீயும் அறிந்திருக்கிறாய்…..!
அறிக்கைகள் வழி உன் அரசியல்!
உரசிப் பார்க்கப்பட்டும்…!
நீ மட்டும் பேசாமல் அமர்ந்தே இருக்கிறாய்!!!!!
எவ்வளவுதான் கீறப்பட்டாலும்!
உன் உணர்வுகளைச் செவிடாக்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாய்!!
அடுத்தவர் வந்து அமர்ந்தாலும்!
அப்படித் தான் பேசப்படும்!!
நாங்களும்!
எழுந்து வராத நியாயங்கள் பற்றி!
பேசிக் கொண்டேதான் இருப்போம்!
அவை முடம் என்று தெரிந்தும்
முனியாண்டி ராஜ்