பிறந்தநாள் பரிசாக!
100 கட்டுமான அடுக்குகள் உள்ள பெட்டி!
மினுக்கும் உறையை!
ஆவலோடு பிரித்தான்!
அட்டையிலேயே ராக்கெட் விமானம்!
கணினி படம் செய்முறை உள்ளே!
எதாவது செய்வோமா அப்பா!
ராக்கெட் செய்யவோமா!
அவனுக்குப் பிடிக்கவில்லை!
விமானமும்தான்.!
இயந்திர மனிதன் செய்தேன்!
உதட்டைப் பிதுக்கினான்!
உலங்கு வானூர்தி!
ஊ ஹ¥ம்!
!
பால் காய்ச்சி ஆறவைத்துவிட்டு!
வந்தபோது!
பறவை வீடொன்று குச்சி உதவியுடன்!
கதவிடுக்கில்!
ஊசலாடிக்கொண்டிருந்தது!
அவன் அம்மா!
வந்தபின்னும் !
அடுக்குகள் விழாதிருக்க!
வேண்டும்!
என்ற விரதம் !
பூண்டவாறு
மாதங்கி