உயிரழியும் வலி உணர்ர்து பார்!
உறவுகள் பிரியும் பொழுதுகளின்!
உணர்வுகளில் வீழ்ந்து பார் !
உடன்பிறப்புகளைத் தொலைத்த!
மனதொன்றின்!
உடைந்த நிலையேகிப்பார். !
உன் மகன் அல்லது மகள்!
கடத்தப்பட்ட கணங்களின் மேல்!
கிடந்து பார்!
இணையதைப் பிரிந்த!
இழவு வீட்டின்!
வெறுமை தின்று பார்.!
அம்மையப்பரை இழந்த!
அநாதைக் குழந்தைகளின்!
ஆழ்துயர் மொழிகளில் வாழ்ந்து பார்!
கொடும் வதைகள் தரும்!
அவசர சட்டங்களின்!
சிக்கலுக்குள் சிதைந்து பார்.!
நன்மை, தீமை - இன்ப துன்பமென!
நாள்தோறும் உடனிருந்த - தோழனைத்!
தொலைத்துருகும் நிமிடங்களில் நின்று பார்!
எறிகணைகள் ஏவி விடப்பட்ட!
நிலத்திடை நின்று - அவை தரும்!
அசுர வலிகளை அனுபவித்துப் பார்!
கைகளை, கால்களை அன்றேல்!
உடலதன் வேறு உறுப்பகளை!
செல்வீச்சில் இழந்து செத்துப்பிழைத்துப் பார்!
சமனிலை பெறா சமூகத்தில்!
ஓரங்கட்டப்பட்ட ஒருவனாய்!
சஞ்சரித்துப்பார்!
அகதி வாழ்வில்!
ஆகாரமின்றி முடங்கி!
அவதியுற்றுப் பார்!
நொருங்கிய வாழ்வின்!
நோவுகள் தாளாது - நீயுங்கூட!
போராட முனைவாய்

மாக்ஸ் பிரபாஹர்