குகை ஓவியங்களின்!
கடைசி வரியில் விரிகிறது!
உன் ஒளிரும் புன்னகையின் குறிப்புகள்.!
தாகம் தணித்த நீர் சுனைகளில்!
கௌவ துடிக்கும் எலும்பு கூடுகள்!
சுவைத்த பேரீச்சம் பழ விதைகளில்!
முளைத்து நிற்கிறது!
உன் வியர்வையின் மணமுள்ள!
பேரீச்சமரங்கள்!
தனிமையின் தவிப்புகளுடன்!
கிறுக்கிய குகை ஓவியங்களில்!
வேட்டை நாட்களின் இறுதியில்!
குளிர் இரவின் நடுக்கங்களுடன்!
நீ தயாரித்த வரைபடம்.!
தொலைந்த வரைபடத்தின் சிதிலங்கள்!
அழைத்து போகின்றன!
உன் வீட்டிற்கு!
ஹிருதயத்தின் சகலநாளங்களிலும்!
விரவும் தீரா தாகம்!
தடமழிந்த பாதைகள் அழைக்கின்றன!
வெளிச்சமற்ற சூரியனை!
பயணங்களின் நீட்சியில்!
தொலைந்துபோகிறது!
என் வீட்டிற்கான வரைபடம்.!
பாதைகளின் கடவுள்!
தவறவிட்ட என் வீடு!
பயண சுவாசங்களில்
குருசு.சாக்ரடீஸ்