எனது பழைய தெருக்களின் வழியே!
எப்பவோ,எவரோ!
சென்றமைக்கான சுவடுகள்!
சருகுகளால் மறைப்புண்டு கிடக்கிறது!
விளங்கிக்கொள்ள முடியாத!
அதன் வளைவுகளில்!
இன்னுமின்னும் அச்சத்தின் அதிர்வுகள்!
கேட்டவண்ணமிருக்கிறது!
எமது எல்லா அச்சம் நிறைந்த ஒழுங்கைகளில்!
மிதிபட்ட சருகுகளுக்குத் தெரியும்!
வன்மம் நிகழ்ந்ததற்கான அசைவெச்சம்!
செருப்புகளோடு சிநேகிதம் கொள்ளாத சப்பாத்துகளும்!
சப்பாத்துகளோடு சிநேகிதம் கொள்ள மறுத்த செருப்புகளும்!
அலைந்தமைக்கான!
எச்சக் குறிகள் மீது இப்போது!
அடா்ந்த சருகுகளின் குவிப்பை!
காற்று கலைத்தபடி இருக்கிறது
கு.றஜீபன்